தவறு
எது தவறு?
நின் அழகை கண்டு மயங்கிய என் மனம் தவறா?
இல்லையேல்
நின் கண்கள் வழியே அன்பைக் காட்டும் நின் குணம் தவறா?
எது தவறு ?
நட்பும் , ஆறுதலும் என்னுள்ளே தேட மறந்தது என் குணத்தின் தவறா?
இல்லையேல்
வஞ்சமின்றி அதை கொடுத்துப் பழகியது நின் குணத்தின் தவறா?
எது தவறு?
நின் ஒற்றைப் பொன் சிரிப்புக்கு ஏங்கி கிடந்த என் மனம் தவறா?
இல்லையேல்
ஒரே சிரிப்பில் ஆயிரம் யானை பலம் தரும் உன் சிரிப்பின் தவறா?
எது தவறு?
கூட்டத்திலும் நின் வாசம் மட்டும் பகுத்தறியும் என் அறிவின் தவறா?
இல்லையேல்
மனதை மயக்கும் பூச்செண்டாக இருப்பது நின் வாசத்தின் தவறா?
எது தவறு?
நின் சோகத்துக்கு மருந்தாகவும் , மகிழ்ச்சிக்கு விருந்தாகவும் இருக்க நினைத்தது என் தவறா?
இல்லையேல்
நின் வேதனைக்கும் , சந்தோசத்தற்கும் என் ஆறுதல் மட்டுமே போதும் என்று நீ நினைத்தது தவறா?
எது தவறு?
நின் மனம் மகிழ என் மொத்தமும் துறந்தேனே அது தவறா?
இல்லையேல்
அது அறிந்தும் கானல் நீர் போல ஒரு புன்னகைப் புரித்தாயே அது தவறா?
எது தவறு ?
உனக்கென்று கட்டிய பாசக் கோட்டையில் நின் சேவகனாய் நான் மட்டும் இருக்க நினைத்த என் மனம் தவறா?
இல்லையேல்
அதை உணர்த்தும் நின் பிரிவாள் என்னை ஒதுக்கிய நின் பெண்மையின் தவறா?
எது தவறு ?
என் கோபமும், கண்ணீரும் நின் ஒரு சொல்லுக்கு அடங்குவது தவறா?
இல்லையேல்
இது தெரிந்தும் விளையாடிய உன் கர்வம் தவறா?
எடுத்தே பழகிய பெண்மைக்கும்
கொடுத்தே பழகிய ஆண்மைக்கும் இந்த உலகம் பழகிப் போனதுதான் தவறா ?