Saturday, 3 June 2017

மாலைப்பொழுதும்! மனதின் கேள்விகளும்!

எப்பொழுதும் போல இந்த பூமி சுழற்சியில் வர மாலைப்பொழுது .. ஆனா என்னமோ அன்றைக்கு எனக்கு அது அவ்வோளோ அழகா தெரிஞ்சுது. சுட சுட ஒரு டம்ளர் காபி உடன் ” வ மா. கொஞ்சம் நேரம் பேசலாம் னு, நானும் என் அம்மாவும் திண்ணைல அமர்ந்தோம் “
ஆவலுடன் நான் பேச ஆரம்பித்தேன் ,
எம்மா இந்த சந்தோசம் னா என்ன ?
என்னடா ஆச்சு உனக்கு ?
சும்மா சொல்லுமா ..
ம்ம் . சந்தோஷத்துக்கு 2 லைன் ல எல்லாம் டெபினிஷன் சொல்ல முடியாது ட. ஒவ்வொரு விஷியத்தையும் நீ பாக்குற விதம் அத நீ எடுத்துக்குறத பொறுத்து இருக்கு ட. பஸ் ல உனக்கு முன்னாடி சீட் ல உக்காந்துருக்க சின்ன பாப்பா உன்ன பாத்து ஒரு சிரிப்பு சிரிக்கும் பாரு , எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாத சிரிப்பு. அதுவும் ஒரு சந்தோசம் தான். உனக்கு புடிச்ச மாறி ஒரு விஷயம் நடந்த தா சந்தோசம் னு அர்த்தம் இல்லை . நடக்குற சின்ன சின்ன விஷியத்துலையும் நீ சந்தோசத்தை தேடி எடுத்துக்கணும் .
ம்ம் சரி .. நீ திரும்ப 10 வயசுக்கு போனேன என்னவெல்லாம் பண்ணுவ ?
 ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒரு சில கஷ்டமான விஷயம் இருக்கு, அந்த ஸ்டேஜ் ல ஹோம் ஒர்க் செய்ய புடிக்காது. இருந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு கெடச்ச எங்க அம்மா கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேம் (இந்த கடைக்கு போறது , டிரஸ் ஆஹ் அதிகமா அழுக்கு பண்ணாம இருக்குறது , அப்பாவுக்கு கால் அமுக்கி விடுறதுனு இப்படி நிறைய.) இதெல்லாம் அவங்க எதிர்ப்பாக மாட்டாங்க. இருந்தாலும் பண்ணுன ரொம்ப சந்தோச பாடுவாங்க.
ஆமா , இந்த காதல் பத்தி உன்னோட கருத்து என்ன அம்மா ?
என்னடா எனக்கு மருமகள் ஏதும் நீயே பாத்துடைய?
அப்படி உண்ணு நடந்த சொல்றேன் மா. இப்போ நீ இதுக்கு பதில் சொல்லு 
போடா அதெல்லாம் முடியாது (என்றால் சிரித்தபடி …)
இருந்தாலும் இதை நான் சொல்லேயே ஆகணும் . நம்ம அம்மா அப்பாக்குள்ள எவ்வோளோ சண்டை போட்டாலும் , அப்பா நைட் கு வீட்டுலதா சாப்பிடுவாரு . அதே மாறி அம்மாவும் சமைக்காம தூங்கவே மாட்டேன். ஆனா இந்த காலத்துல காதல் – சின்ன சண்டைன்னாலும் அந்த அன்னைக்கு நைட் சாப்பாடு மட்டும் இல்ல 3 நாளைக்கு ஹோட்டல் சாப்பாடு தான் . நமக்கு புடிச்ச மாறி அவளோ அவனோ இல்லையே ன்னு பீல் பண்ணி கஷ்டப்படுறோம் . ஆனா ” உங்க அப்பா இப்படி தாண்ட எனக்கு பழகி போச்சு , உங்க அம்மா கிட்ட புடிச்சதே அடிக்கடி அவ தீட்டுறதுதான்டா னு ” அவங்க அவங்க கேரக்டர் ஆஹ் அப்படியே ஏத்துக்கிட்டு போறாங்க பாரு இது தா காதல் னு இப்போ இருக்குற நிறைய பேருக்கு தெரில..
பிச்சைகாரங்களா பத்தி நீ என்ன நெனைக்குற ?
 உடல் அளவுல எதாவது பாதிப்பு இருந்து ஒரு வேலை குட சாப்பிட முடியாம இருந்ததா தான் பிச்சைக்காரன் னு அர்த்தம் இல்லை ட. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷியத்துக்காக இல்ல, ஒரு உறவுக்காக ஓடிட்டு இருக்குற நம்மளும் பிச்சைகாரங்கதான். என்ன நமக்கு மூணு வேலைக்கு
சாப்பாடு இருக்கும்.அதனால சின்ன பிரைச்சனையா பெருசா பீல் பண்ணி டைம் வேஸ்ட் பண்றோம். ஆனா அவங்களுக்கு ஒரு வேலை சாப்பாடே பிரச்சனை தான். எப்போ ஒருத்தன் தான் சுய மரியாதையை எல்லாம் விட்டுட்டு வறட்டு கவுரவம் பாக்காம ஒரு ரூபாய் கு கை எந்தனும்னு நெனைச்சானோ அப்போவே அவன் மனுஷன் ஆயிட்டான். அதனால அதுக்கு மரியாதை கொடுத்து அவங்களுக்கு நம்மளால முடிஞ்சதா பண்ணனும் ட.
உதவி பண்றத நீ எப்படி பாக்குற ?
 இப்போ எல்லாம் விளம்பர பண்ண இத அதிகமா பயன்படுதிக்குறாங்க. உனக்கு புடிச்சவங்களுக்கு நீ எவ்ளோ பண்ணுனாலும் அதுலயும் ஒரு சுயநலம் இருக்கும் . அவங்க உன் மேல பாசமா இருக்கனும் னு . அது கொஞ்சம் கொறந்த கூட அடுத்த டைம் அந்த உதவி நீ பண்ணுவையான்னு தெரியாது. ஆனா எந்த ஒரு பாசமோ சுயநலமோ இல்லாம ஒரு உதவி பண்ணி பாரேன் . அதுல கிடைக்குற சந்தோசமே வேற. முடிஞ்சா மாசம் கொஞ்சம் பணத்தை ஒரு அக்ஷரமோ இல ஒரு கஷ்டப்படுற குடும்பத்துக்கோ குடு. பஸ் ல வயசானவங்க வந்த சிரிச்ச முகத்தோட அவங்களுக்கு உக்கார சீட் குடு. ஹோட்டல் ல யாருன்னே தெரியாத ஒருத்த உனக்கு முன்னாடி உக்காந்து சாப்பிடும் பொது ஒரு பொறை எருச்சுன டம்ளர் ல தண்ணி எடுத்து நீடு. ரோடு ல ரெட் சிக்னல் போட பிறகும் வண்டிய முறுக்கிக்கிட்டு ஹார்ன் ஆஹ் அடிக்காம ரோட்டை கிராஸ் பண்றவங்களுக்கு வெயிட் பண்ணு. இதெல்லாம் ஒரு சின்ன சின்ன உதவி தான் ட.
ம்ம் சரி பேசுனது போதும் நைட் கு என்ன சாப்பிடுற சொல்லு. நான் போய் ரெடி பண்றே .. என்றவாறே குடித்து முடித்த டி டம்ளரை வாங்கி கொண்டு அவள் சென்றால்..

நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளையும் நிறைய நல்ல விஷயம் , கருத்துக்கள் இருக்கும். ஆனா எங்க நம்ம நம்மள இருந்த இந்த சமூகம் ஏத்துக்காதோன்னு ஒரு முகமூடியை அணிஞ்சுகிட்டு யாருக்காக வாழுறோம்னு தெரியாம இருக்குறத விட , புடிச்ச மாறி வாழ்ந்து பாப்போம் . கண்டிப்பா இந்த வாழ்கை சந்தோசமா இருக்கும்..